Yacoob Khan Tntj. - Dubai

எனது புகைப்படம்
India
“நிச்சயமாக (முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், (அதற்கான உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை ‘அலக்’ என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:12-14)

சனி, 30 ஜூலை, 2011

நெருங்கி விட்டது ரமளான் மாதம் !

நெருங்கி விட்டது ரமளான் மாதம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்....

شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ...

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும்... திருக்குர்ஆன். 2:185


நெருங்கி விட்டது ரமளான் மாதம்

ஆண்டான் - அடிமை, தலையில் பிறந்தோன் காலில் பிறந்தோன், கருப்பன்- சிவப்பன் என்ற அடிமை விலங்கை உடைத்தெறிந்து ஆதமின் மக்கள் அனைவரும் சமமே என்று முழங்கிய திருமறைக் குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

பெண் சிசுவை உயிருடன் புதைத்து, பெண் இனத்திற்கு ஆன்மா உண்டா ? என்று ஆய்வுக்குட்படுத்திய பெண்ணடிமைத் தனத்தை உடைத்தெறிந்து ஆணும் - பெண்ணும் ஓரினமே என்று முழங்கிய நீதமிகு குர்ஆன் இறங்கிய அருள்மிகு மாதம் நெருங்கி விட்டது.

நன்மை தீமைகளைப் பிரித்தறிவித்து மனிதனை மனிதனாக வாழச் செய்ய நேர்வழிக் காட்டிய மகத்துவமிக்க குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் நெருங்கி விட்டது.

நிரந்தர மறுமை வாழ்வின் இன்பத்தை மறந்து நிலையில்லா உலக வளங்களின் மீது மூழ்கிக் கிடந்தவர்களுக்கு மறுமை வாழ்வின் இன்பத்தை நிணைவூட்ட நெருங்கி விட்டது ரமளான் மாதம்.

கல் நெஞ்சை கரையச் செய்து இறக்க குணத்தை வளரச் செய்த ஈகை மிகு மாதம் நெருங்கி விட்டது.

பாவங்கள் அழிக்கப்பட்டு நன்மைகள் குவிக்கப்படும் பாக்கியமிக்க மாதம் நெருங்கி விட்டது.

நரக வாயில்கள் பூட்டப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் நன்மையின் மாதம் நெருங்கிவிட்டது.

அமல்களின் வாசல்கள் திறக்கப்படும் அருள் மிகு மாதம் நெருங்கி விட்டது.

அருள்மிகு மாதத்தில் அமல்கள் அதிகம் செய்து அளவற்ற அருளாலனின் நிகரற்ற அன்பை அடைந்து கொள்வோம் வாருங்கள்.

ரமளான் மாதத்தின் நன்மைகளை பூரணமாக அடைந்து கொள்வதற்கு கீழ் காணும் லிங்கை சொடுக்குங்கள்.

1-நூல்கள்

2-கட்டுரைகள் கேள்விகள்

3- ஆடியோ வீடியோக்கள்
5- நோன்பு குறித்த சட்டங்களை அறிந்திட
6- தராவீஹ் தொழுகை

7-பெருநாள் தொழுகை

நோன்பு - கேள்விகளின் தொகுப்பு
மேலே உள்ள தலைப்புகள் பற்றி அறிந்து கொள்ள ஆன்லைன் பி.ஜெ.காம் பார்க்கவும்
நன்றி: கோவை ரஹ்மத்துல்லாஹ்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

Share it